எழுந்து பெத்தேலுக்கு போ
அதுதானே தகப்பன் வீடு
நன்மைகள் பல செய்த
நல்லவர் இயேசுவுக்கு
நன்றி பாடல் பாடணும் ஆதி 35:3
1.
ஆபத்துநாளிலே பதில் தந்தாரே,
அதற்கு நன்றி சொல்வோம்
நடந்த பாதையெல்லாம் கூட வந்தாரே,
அதற்கு நன்றி சொல்வோம்
அப்பா தகப்பனே நன்றி நன்றி
எழுந்து பெத்தேல் செல்லுவோம் – எழுந்து
2.
போகுமிடமெல்லாம் கூடயிருந்து
காத்து கொள்வேன்னென்றீர்
சொன்னதை செய்து முடிக்கும் வரைக்கும்
கைவிடமாட்டேனென்றீர் – எழுந்து
3.
பிறந்த நாள் முதல் இந்நாள் வரைக்கும்
ஆதரித்த ஆயரே
ஆபிரகாம் ஈசாக்கு வழிபட்டு
வணங்கிய எங்கள் தெய்வமே – எழுந்து
4.
எல்லா தீமைக்கும் நீங்களாக்கி
என்னை மீட்டீரையா
வாழ்நாள் முழுவதும் மேய்ப்பனாயிருந்து
நடத்தி வந்தீரையா – எழுந்து
5.
படுத்திருக்கும் இந்த பூமி சொந்தமாகும்
என்று வாக்குரைதீரே
பலுகி பெருகி தேசமாய் மாறுவோம்
என்று வாக்குரைதீரே – எழுந்து
6.
அந்நிய தெய்வங்கள் அருவருப்புகள்
அகற்றி புதைத்திடுவோம்
ஆடை மாற்றுவோம் தூய்மையாக்குவோம்
பாடி கொண்டாடுவோம் – எழுந்து
7.
வெறுங்கையோடு பயந்து ஓடிய யாக்கோபை
தெரிந்து கொண்டீர்
இஸ்ராயேல் இனமாய் ஆசீர்வதித்து
பலுகிப்பெருகச் செய்தீர். – எழுந்து